கதை ( வாழ்கை ஒரு வாய்ப்பு)
வாழ்க்கை ஒரு வாய்ப்பு.
ஓஷோ
நான் ஒரு வியாபாரியைப் பற்றிச் சொல்லுகிறேன்...
ஒரு வியாபாரி மதிய உணவு உட்கொள்ள, ஒரு விடுதியை
நோக்கிச் செல்லுகிறான்...
வழியில் ஒருவன்... அவனை நிறுத்தி,
"என்னை உங்களுக்கு ஞாபகம் இருக்குமா? என்று தெரியவில்லை...
சுமார் பத்து வருடங்களுக்கு முன்,
இந்த நகரத்துக்கு வந்தேன்...
அப்பொழுது உங்களிடம் கொஞ்சம் பணம் கேட்டேன்...
நீங்கள் 20 டாலர் கொடுத்து உதவினீர்கள்...
அப்போது நீங்கள்...
"ஒரு மனிதன் வெற்றிப் பாதையில் செல்ல இது வழி வகுக்கட்டும்" என்று
வாழ்த்திக் கொடுத்தீர்கள்...என்றான்.
அதற்கு அந்த வியாபாரி...சிறிது யோசித்து விட்டு...
"ஆமாம், எனக்கு ஞாபகம் வந்து விட்டது, மேலும் சொல்லுங்கள்" என்று ஆவலுடன் கேட்டார்...
அதற்கு அந்த ஆள்...
"நல்லது,
இப்பொழுதும் அதைப் போல
ஒரு சந்தர்ப்பம் எனக்குக் கொடுக்க விரும்புகிறீர்களா?" என்றான்.
வாழ்க்கை, உங்களிடம் திரும்பத் திரும்ப இதே கேள்வியைத் தான்
கேட்டுக் கொண்டே இருக்கிறது...
"நீங்கள் வாழ்வதற்கு மீண்டும்
தயாராக இருக்கிறீர்களா?"
என்று தொடர்ந்து உங்களிடம்
கேட்டுக் கொண்டே இருக்கிறது."
Comments
Post a Comment