Posts

Showing posts from August, 2020

உண்மைக் கதை (பெற்றோரை அரவணையுங்கள்)

 *உண்மை கதை*  காஃபி குடித்த டம்ளரை என்னிடமிருந்து வாங்கிக்கொண்ட என் மனைவி, நகராமல் அப்படியே நின்றாள். ' என்ன ' என்பதுபோல் வைதேகியை ஏறெடுத்துப் பார்த்தேன். " உங்கப் பையனும் மருமகளும் நாளை காலையில ஹனிமூன் முடிஞ்சூ சிம்லாவிலேர்ந்து திரும்பி வராங்க..." " சரி. அதுக்கென்ன இப்போ ?" " அவங்க தங்க ரூம் வேண்டாமா..அந்த ரூம்லதான உங்க அம்மா தங்கியிருக்காங்க ! இவ்வளவுநாள் இருந்தது போதும். அவங்கள ஹாலுக்கு ஷிப்ட் பண்ணச் சொல்லுங்க ." வாஸ்தவம்தான். முப்பது வருஷத்துக்கு முன்னால் என் தந்தை கட்டிய வீடு.பாத் ரூம் அட்டாச்சுடன் இரண்டு படுக்கையறைகள். ஹால். அதிலும் அட்டாச்டு பாத்வசதி உண்டு. சமையலறை; டைனிங் ரூம் ; பூஜையறை என்று விஸ்தாரமாய் கட்டப்பட்ட வீடு. இப்போது என் அம்மா தங்கிக் கொண்டிருக்கும் அறைதான் என் தந்தை உபயோகித்தது. நான் இருக்கும் படுக்கையறையை ஆரம்பத்திலிருந்தே பயன்படுத்தி வருகிறேன். எனக்குத் திருமணமாகி ஐந்து வருடங்கள்வரை என் தந்தை உயிருடன் இருந்தார். இன்றுவரை தன்ரூம் என்ற உரிமையுடன் இருந்து வருகிறாள் அம்மா. இப்போது தடாலென்று ஹாலுக்கு வரச் சொன்னால்... அதுவும் உறவின...

கதை ( வாழ்கை ஒரு வாய்ப்பு)

வாழ்க்கை ஒரு வாய்ப்பு. ஓஷோ நான் ஒரு வியாபாரியைப் பற்றிச் சொல்லுகிறேன்... ஒரு வியாபாரி மதிய உணவு உட்கொள்ள, ஒரு விடுதியை நோக்கிச் செல்லுகிறான்... வழியில் ஒருவன்... அவனை நிறுத்தி,  "என்னை உங்களுக்கு ஞாபகம் இருக்குமா? என்று தெரியவில்லை... சுமார் பத்து வருடங்களுக்கு முன்,  இந்த நகரத்துக்கு வந்தேன்... அப்பொழுது உங்களிடம் கொஞ்சம் பணம் கேட்டேன்... நீங்கள் 20 டாலர் கொடுத்து உதவினீர்கள்... அப்போது நீங்கள்... "ஒரு மனிதன் வெற்றிப் பாதையில் செல்ல இது வழி வகுக்கட்டும்" என்று  வாழ்த்திக் கொடுத்தீர்கள்...என்றான். அதற்கு அந்த வியாபாரி...சிறிது யோசித்து விட்டு... "ஆமாம், எனக்கு ஞாபகம் வந்து விட்டது, மேலும் சொல்லுங்கள்" என்று ஆவலுடன் கேட்டார்... அதற்கு அந்த ஆள்... "நல்லது,   இப்பொழுதும் அதைப் போல  ஒரு சந்தர்ப்பம் எனக்குக் கொடுக்க விரும்புகிறீர்களா?" என்றான். வாழ்க்கை, உங்களிடம் திரும்பத் திரும்ப இதே கேள்வியைத் தான்  கேட்டுக் கொண்டே இருக்கிறது... "நீங்கள் வாழ்வதற்கு மீண்டும்  தயாராக இருக்கிறீர்களா?" என்று தொடர்ந்து உங்களிடம் கேட்டுக் கொண்டே இருக்கிறது."