Posts

Showing posts from July, 2021

எது தேவை

 எது நமக்குத்தேவை? ஒரு நாட்டை ஆண்ட மன்னன், தனது நாட்டை பார்வையிட நீண்டதொரு பயணம்மேற்கொண்டான்.அந்தப்பயணம் அவனுக்கு களைப்பையும், கால்வலி யையும்உருவாக்கிவிட்டது. காரணம் சாலைகள் முழுவதும் பள்ளம் மேடாகவும், குண்டு குழியுமாகவும் இருந்தது. சில இடங்களில் மன்னன் தேரில் இருந்து இறங்கி நடந்து செல்ல நேரிட்டது. மன்னன் அரண்மனைக் குத்திரும்பி வந்தவுடன், அமைச்சரை அழைத்து, "அமைச்சரே,நமது நாட்டிலுள்ள குடிமக்கள்  அனைவரும் ஒவ்வொரு சாலையையும் தோலால் மூட கட்டளையிடுங்கள்!" என்றார்.இதைச் செய்வதற்கு,அரசுக்கு ஆயிரக்கணக்கான பசுக்களின் தோலும், பணமும்தேவைப்படுமே என்று மன்னன் சிந்திக்க வில்லையே ஏன் என்று அமைச்சர் வருத்தப்பட்டார். அமைச்சரின்உதவியாளன் ஒருவன் மிக புத்திசாலி. அவன் துணிச்சலுடன் மன்னனிடம் சென்று “பணத்தை ஏன் இவ்விதம் வீணாகச்செலவழிக்க வேண்டும் மன்னா? சாலைகளை ஏன் தோலால் மூடவேண்டும் மன்னா?அதற்குப்பதில் தங்கள் கால்களை சிறிதளவு தோலினால் பாதுகாத்துக் கொள்ளலாமே?” என்றான். இந்த பரிந்துரையை கேட்ட மன்னன் முதலில் ஆச்சரியப்பட்டான்.பின்னர் தனக்கு ஒரு காலணி செய்யுமாறு கூறி அந்த ஆலோசனையை ஏற்றுக் கொண்டான்.இதன்ம...